என்னைத் துரத்தும்
நீ !
முன்னிருக்கும் முடிவுறா வட்டங்கள்
உன்னிடம்
அருகவும், விலகவும் வைத்து
விளையாடுகின்றன !
என்னிலிருந்து நான் வெளிப்பட்டு
உன்னிலிருந்து தப்ப முயல்கிறேன் ..
சுழல் வட்டங்கள்
தூக்கி எறிந்த அதை
ஏந்திய மாயக்கண்ணாடியின்
மறுபக்கத்திலும் நீ !
உன்னை விடவே முடியா
உணர்வுப் பள்ளத்தில்
இது!
தொடத்துடிக்கும் விரல்கள்
தொடவே முடியாதபடி
ஆடியின்
உள்ளேயும் வெளியேயும்
நீயும் நானும் !
Wednesday, December 22, 2010
Tuesday, December 7, 2010
மாற்றம்
நல்ல யுகலிப்டஸ்,துளசி,விபூதி பச்சிலை சேர்ந்து நறுமணமாக எங்கும் பரவி இருந்தது மூச்சை இழுத்து உள்வாங்கிக்கொண்டே விரைவாக நடந்தாள் சௌமியா.
நிச்சயம் இந்த காற்றே எதோ மாற்றம் செய்யும் என எண்ணியது மனது .
சௌமியா அப்படியெல்லாம் பணத்தில் புரண்டவள் இல்லை .மாத கடைசியில் கடன் வாங்கி நாளை ஓட்டும் குடும்பம் தான் .ஆனால் அவளின் அழகும் ,திறமையும் ,இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது .
"கனவு போல" என்று நினைத்துக் கொண்டாள் .
இப்போது கொதிக்கும் டீயின் மணம்....இந்த மணங்கள் தான் எப்படி நினைவுகளை கிளரச் செய்கின்றன ??
ஸ்ரீதர் அவளை பெண் கேட்டு வந்த நாளில் இதே டீ மணம் தான் .அப்பா நம்பவே இல்லை .ஏன் இவளுக்கே இன்னும் புரிபடாமல் தான் இருக்கிறது !
படிப்பு படிப்பு என்ற கனவெல்லாம் எங்கோ போனது .
"நீ என்ன வேணும்னாலும் படிமா "என வாஞ்சையுடன் கூறும் மாமனார் ..
இங்கே அனுப்பி வைத்தது கூட அவர் தான்
ஆனால் கனவெல்லாம் காணாமலே போய்விட்டது .இப்போது மனதெல்லாம் ஸ்ரீ மட்டுமே ...
எதற்கும் பணியாமல் முரண்டு பிடிக்கும் மனம் .....மனமா இல்லை உடல் !
"நீ மட்டும் வெளிநாடு செல்ல என்னை ஏன் மணமுடித்தாய் ? "ஆயிரம் முறையாக மனது கேட்கும் கேள்வி
ஸ்ரீ ஸ்ரீ என்று உருகியது ..அவன் நினைவு வர பரபரக்கும் சிந்தனை!அதனால் வரும் மாற்றம் !
"ச்சே !எப்போதிலிருந்து நான் நானில்லாமல் போனேன் ?"
வெட்கமாய் தான் இருக்கிறது
ஹ்ம்ம் மாற்று மாற்று மாற்று !
இதையெல்லாம் உணர்ந்திருக்க கூடும் வீட்டில் பெரியவர்கள் .....மீண்டும் பாட்டு ஓவியம் ஏன் போக அதுவும் சரிப்படாமல் போனது.
"இன்னும் ஆறே மாசம் டா ஓடி வந்திடுவேன் " என மூன்று ஆறு மாசங்கள் ஓடி போயாச்சு .
சென்ற ஒரு வாரமாய் ஒழுங்காய் பேசாததாலும்,கணிணி இல்லாததாலும் ,அவள் இருந்த நிலைமை பார்த்து இங்கே வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள் .
"ஹ்ம்ம் நன்றாய் தான் இருக்கிறது ...ஸ்ரீயும் இங்கிருந்தால்?...."மனம் சிலந்தி வலை பின்னக் கூடாதென்று விரைந்து நடந்தாள் சௌமியா.
"ஹாய் நான் தான் ரேணுகா !உங்க ரூம் மேட் " என்று கைகுலுக்கியவளை அதிசயத்துடன் பார்த்தாள் சௌமியா
நல்ல உயரம் ,மினுமினுக்கும் பழுப்பு நிறம் ,ஆளையடிக்கும் புன்சிரிப்புடன் ரேணுகா ..அப்பா! என்ன ஒரு ஆளுமை .
அவள் வருடா வருடம் வருவாளாம் .அவள் வேலை பார்க்கும் கம்பனிலேயே
இதுபோல லீவ் கொடுத்து அனுப்புவார்களாம் .அவள் செய்யும் வேலை அப்படி !
இன்னும் திருமணமாகவில்லை.
"LOOKING!"என்று கண்ணடித்தாள் .
"இங்கு ரிசப்ஷனில் நீங்கள் தான் என் கூட தங்கியிருக்க போவதாக சொன்னார்கள்.வா சாப்பிட போகலாம் ..வா போன்னு கூப்பிடலாம் தானே ?"
என்றவளை பார்த்து தலையாட்டுவதை தவிர வேறதும் தோணவில்லை !
சௌமியா !ஏன் புடவையிலே இருக்கே !இங்கு பயிற்சி செய்ய பாண்ட் சுடிதான் சரி .okயா?
'ஏய் சௌமி,அழகான புன்னகைப்பா" என
"அது சரி" என நினைத்துக் கொண்டாள்
ரேணுவிற்கு அங்கு பல தெரிந்த முகங்கள். எல்லார் அறிமுகமும் ,கலந்துரையாடலும்
சிரிப்பும் ,பேச்சும் ,கல்லூரி நாட்களை நினைவூட்டி ,மனது சிறிது லேசானது போல ..
"தேங்க்ஸ் மாமா "என மனதில் சொல்லிகொண்டாள் .
ஒளிந்திருந்த எண்ணம் மீண்டும் வெளிப்பட்டு "ஸ்ரீ மட்டும் .......சூ...... சூ....... என அதை ஓட
விரட்டினாள்.
"நான் முதலில் ஒரு குளியலை போட்டு வந்து விடுகிறேன் "என ஓடிவிட்டாள் ரேணு .பழக்கமில்லாமல் கூடுதலாக நடந்து காலெல்லாம் ஒரே வலி .
திரும்ப வந்த ரேணு "ஓ கால் வலிக்குதா ?என சொல்ல சொல்ல கேளாமல் தைலம் தேய்த்து பாதங்களை பிடித்து விட்டாள்.
அந்த இதத்திலேயே தூங்கிப்போன சௌமியா ,திடீரென்று உடல் சிலிர்த்து விழித்த போது
'உனக்கு எத்தனை அழகான ,வெண்மையான இடை !"என
சௌமியாவின் புடவை விலகி பளீரிட்ட இடையை ரேணு வருடிக்கொண்டிருந்தாள்
அதை தடுக்கத் தோன்றாமல் அப்படியே படுத்திருந்த அவளின் கண்ணின் ஓரம் மட்டும் இரண்டு நீர்த்துளிகள் ..
Subscribe to:
Posts (Atom)