Friday, November 19, 2010

ஜிங்கிள் ஆல் த வே !


நவம்பர் துவங்கியவுடனேயே
எழுப்பி விடுகிறார்கள் .

வரிசையான கோரிக்கைகள்
மடியில் அமர்ந்தும் ,கனவில் கிசுகிசுத்தும் ,கடிதம் போட்டும்
ஆசைகள் ஆயிரம்.

வீடு வீடாக அலங்கரிக்கப்பட்டமரங்களில்
தொங்கும் காலுறைகளையெல்லாம் நிரப்பி நிரப்பி
வாதமேறிய விரல்கள் மேலும் விறைக்கின்றன.

ஆண்டுகள் ஈராயிரம் ஓடிக்களைத்த ரெயின்டீர்கள்
இனி ஓடுமோ என வருடந்தோறும் தோணுகிறது !

ஆசைகள் விகசித்து
ரொம்பிவழியும் ஸ்லெட்ஜின் அச்சாணி
இற்றுபோகாததொரு அதிசயம் தான் ..

ஜிங்கிள் மணியின் ஓசைகூட
மந்தமான காதில் மெதுவாய்த்தான் கேட்கிறது .

புகைபோக்கி வழி வெளிவந்து ருமாடிச காலைத் தேய்த்து நடக்கையில்...
இரண்டாயிரத்து பத்தாவது முறைகூட
தன் ஆசை என்னவென்று யாருமே கேட்கா ஏமாற்றத்தில்..
அடுத்த வருடமாவது !என்ற ஏக்கத்தோடு நீளுறக்கம் கொள்வார்..
மீட்பன் பிறந்த தினம், கொடுத்துச் சிவந்த ஆதித் தாத்தா

38 comments:

எல் கே said...

வித்யாசமான கோணம்

வினோ said...

இப்படியும் யோசிக்க முடியுமா ?

ரிஷபன் said...

இரண்டாயிரத்து பத்தாவது முறைகூட
தன் ஆசை என்னவென்று யாருமே கேட்கா ஏமாற்றத்தில்..

கொடுத்துச் சிவந்த ஆதித் தாத்தா..

எனக்கு உடன்பாடு இல்லைதான்.. கவிதையின் கருத்தில். (தாத்தா நிச்சயம் எதிர்பார்ப்பது மனிதத்தை எனில் டபுள் ஓக்கே) ஆனால் சொல்லிய விதம் கிளாஸ்.

sakthi said...

இந்த முறை நான் வேணுமின்னு கேட்கவா ????

sakthi said...

புகைபோக்கி வழி வெளிவந்து ருமாடிச காலைத் தேய்த்து நடக்கையில்...
இரண்டாயிரத்து பத்தாவது முறைகூட
தன் ஆசை என்னவென்று யாருமே கேட்கா ஏமாற்றத்தில்..
அடுத்த வருடமாவது !என்ற ஏக்கத்தோடு நீளுறக்கம் கொள்வார்..
மீட்பன் பிறந்த தினம், கொடுத்துச் சிவந்த ஆதித் தாத்தா

கிளாஸ்!!!!

Jerry Eshananda said...

அட...அசத்திடீங்க

ADHI VENKAT said...

அழகாய் இருந்தது.

vasu balaji said...

நல்லாருக்கு.

/தன் ஆசை என்னவென்று யாருமே கேட்கா ஏமாற்றத்தில்..
அடுத்த வருடமாவது !என்ற ஏக்கத்தோடு நீளுறக்கம் கொள்வார்.. /

Prabu M said...

ரொம்ப அழகான கவிதை...
வார்த்தைகளால தூக்கிக்கொண்டுவந்து மனசுக்கு ரொம்ப ரொம்ப பக்கத்துல உக்காரவெச்சிட்டீங்க....
டைட்டில்... படம்... வரிகள்... ஃபீல்.. மூட் எல்லாமே கச்சிதம்.... ஃபைவ்ஸ்டார்ஸ்!!

அன்பரசன் said...

//அடுத்த வருடமாவது !என்ற ஏக்கத்தோடு நீளுறக்கம் கொள்வார்.. //

:)

'பரிவை' சே.குமார் said...

யோசனையில் முளைத்த வித்தியாசமான பகிர்வு.

நிலாமதி said...

ஆதிதாத்தாவின் ஆசை சமாதானம் கிடைக்கும் என்று, வரும் வருடத்தை மகிழ்வோடு எதிர் நோக்கத்தான்.

தெய்வசுகந்தி said...

அசத்தல்!!

ஸ்ரீராம். said...

மாத்தி யோசிச்சு எதிர்ப் பக்கத்திலிருந்து எழுதிய கவிதை!

ராகவன் said...

அன்பு பத்மா,

அங்கு காமராஜுக்கு மார்கழி பிறந்து விட்டது போல உங்களுக்கு டிசம்பர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்... படிக்கவில்லை... வந்து படிக்கிறேன்

அன்புடன்
ராகவன்

ஜெயசீலன் said...

வித்யாசமான முயற்சி...
பலத்த கைத்தட்டல்கள்...
master piece.. :)

Ahamed irshad said...

umm wonderful Lines..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_20.html

பூங்குழலி said...

ரொம்ப அழகாக இருக்கிறது .கிறிஸ்துமஸ் சீசனின் முதல் கவிதை

காமராஜ் said...

ஒரு குறிஞ்சிக் கவிதை.

Thenammai Lakshmanan said...

அட ..!! ரொம்ப அருமை பத்மா..:))

Unknown said...

super

ஹேமா said...

நத்தார் தாத்தாவுக்கே கவிதையா !

Priya said...

அழகான கவிதை!

அப்பாதுரை said...

தாத்தாவுக்கு என்ன வேணும்னு இந்த வருசம் கேட்டா போவுது..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அதி அற்புதம்!!



ஆர்.ஆர்.ஆர்.

கவி அழகன் said...

வழமைபோல் சுப்பர்

msaraswathi78 said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது..மேடம், ஆனால் ஸ்லெட்ஜின் அச்சாணி என்பதுதான் இடிக்கிறது

adhiran said...

halo padhu.. some busy.keep it up.

uma said...

Haha new yearya november madhae ivite panna perumai unnai serum good going KEEP IT UP very nice padmaja

மே. இசக்கிமுத்து said...

நல்ல சிந்தனை,
தாத்தாவிற்கும் ஆசைகள் உன்டல்லவா?

அருமை பத்மா..!

பத்மா said...

@ L K
ரொம்ப நன்றிங்க

@வினோ
:)

@ரிஷபன்
தேங்க்ஸ் சார்

@ஷக்தி
கேளுங்க மா

@ஜெர்ரி ஈசானந்தன்
@கோவை 2 தில்லி
@வானம்பாடிகள் சார்
ரொம்ப ரொம்ப நன்றிங்க

பத்மா said...

@பிரபு
ஐந்து நட்சத்திரங்களையும் பெற்றுக் கொண்டேன்
அன்புக்கும் கருத்துக்கும் நன்றி

@அன்பரசன்
:))

@சே குமார்
ஆமாம்ஜி

@நிலாமதி
தேங்க்ஸ் மா

@தெய்வ சுகந்தி
@ஸ்ரீராம்
நன்றிங்க

@ராகவன்
இன்னும் நேரம் வாய்க்கவில்லையா?

பத்மா said...

@ஜெயசீலன்
கைதட்டல் வளர்க்கும் !!!நன்றி

@இர்ஷாத்
ரொம்ப நன்றிங்க
இன்றைக்கு தான் வலைச்சரமும் பார்த்தேன் ..
வார்த்தைகள் இல்லை நன்றி கூற ..

@பூங்குழலி
நன்றி மா

@காமராஜ் சார்
நன்றி ..உங்கள் வருகையே பெருமைபடுத்துகிறது

பத்மா said...

@தேனம்மை
நன்றி தேனு ...நலமா?

@கலாநேசன்
தேங்க்ஸ்

@ஹேமா
நக்தார் ...பழைய நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் வார்த்தை பிரயோகம் ..
NOSTALGIC .

@பிரியா
தேங்க்ஸ் மா

@அப்பாதுரை சார்
கேளுங்க சார்
தாத்தாவின் இடத்தில் நாம் எல்லோரும் பொருந்துவோம் தானே ..
யாராவது கேட்க நினைத்தால் கூட மகிழ்ச்சி தான்

பத்மா said...

@ஆர் ஆர் சார்
மிக்க நன்றி

நன்றிங்க யாதவன்

@சரஸ்வதி
டீச்சர் !இதில் பொருள் குத்தம் பாக்காதீங்க ப்ளீஸ் !:))
எதோ எழுதிட்டேன் !.
வந்து ,படித்து, கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றிங்க !

@அதிரன் ,
சரி சரி

@உமா
தேங்க்ஸ் டி

@இசக்கிமுத்து
வாங்க சார் ,நலமா?
மீண்டும் உங்களை வலைப்பூவில் பார்ப்பதில் மகிழ்ச்சி ..
கருத்துக்கு நன்றி

pichaikaaran said...

முன்பு ஒரு முறை, டு கில் மாக்கிங் பர்ட் என்ற கதையை எனக்கு சஜஸ்ட் செய்தீர்கள்..
இப்போதுதான் படிக்க முடிந்தது...

மிக நல்ல நாவல்..

நன்றி

harikrishna said...

அன்பு வன்முறையாகும் இடத்தை துல்லியமாக வேறுபடுத்திக் காட்டும்
உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Prabu M said...

வ‌ண‌க்க‌ம்....
என்ன‌ங்க‌ உங்க‌ள‌ ரொம்ப‌ நாளா காணோம்!!
ந‌ண்ப‌ர்க‌ளோட‌ ப‌திவுக‌ளுக்கு என்னுடைய‌ ப‌திவிலிருந்து லிங்க் கொடுக்க‌ முய‌ற்சித்த‌போதுதான் கவ‌னித்தேன்... "ஜிங்கிள் ஆல் தி வே"க்கு அப்புற‌ம் நீங்க‌ எழுத‌வே இல்லையேன்னு...
என்னுடைய‌ ஐந்து ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளைப் பெற்றுக்கொண்டத‌ற்கு ந‌ன்றி... :)
தொட‌ர்ந்து எழுதுங்க‌ளேன்.. :)
ஒரு வாச‌கனாய் ஒரு சின்ன‌ விண்ண‌ப்ப‌ம்... க‌ன்ஸிட‌ர் ப‌ண்ணுங்க‌ :)