Tuesday, November 9, 2010

உடைந்த நகங்களும் ,கூர் பற்களும்

நகங்கள்
மிருகங்களிடம் மட்டுமே
நீண்டு வளரும் என நான் நம்பியது
உனக்குத் தெரிந்திருந்தது.  
அதனால் உன் கூரிய நகங்களை
என்றும்
மடக்கி,மறைத்தே வைத்திருந்தாய் .

உன் பின்விரல்களால்
என் முகம் தடவும் போதும்
உன் விரல்கள்
மழுங்கியேதான் தோன்றின .

ஆயின்
துரோகத்தின் சுவையறிந்து
ரத்தவிளாரான என் முகம் பொத்தி
விக்கித்து அமர்ந்த போது,
உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை....

நீ உன் விஷப்பற்களை
சாணை பிடிக்கப் போயிருக்கலாம்
எனத் தெரிந்திருந்தும் கூட .

42 comments:

Prabu M said...

//உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை....
//

இந்த‌ப் புன்ன‌கையைக் க‌ற்ப‌னை செய்து பார்க்கிறேன்..
ஹ்ம்ம்ம்...ப‌வ‌ர்ஃபுல்ங்க‌... ந‌க‌ங்க‌ளும் ப‌ற்களும் ப‌ல்வீன‌த்தின் சின்ன‌மாக‌வே பிர‌திப‌லிக்கிற‌து..
ரொம்ப‌ ந‌ல்ல‌ க‌விதைங்க‌.... வாழ்த்துக்க‌ள் :)

எல் கே said...

அர்த்தம் பொதிந்த வார்த்தை பிரயோகம்

ADHI VENKAT said...

நல்லதோர் கவிதை படைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்க்காதலன் said...

துரோகத்தின் துகிலுரித்த பத்மா.., வணக்கமுங்க. என்னங்க ஆச்சி...! இவ்வளவு வன்மையாய் கவிதை பிறக்க..! மறைத்த நகம் கிழித்த கீற்றல் இரத்தத்துளிகள் இன்னும் இன்னும் கசிகிறது மனதில். கூரியப் பற்களின் சாணை தீட்டிய கூர்மை.... அப்பப்பா....ம்ம்ம்ம் நினைக்கவே பயமா இருக்குங்க. ஏங்க அப்பப்ப நம்ம பக்கம் வாங்க.., கொஞ்சம் இதமா இருக்குமேன்னுதான்.

கவி அழகன் said...

நல்ல வரிகள் நல்லா இருக்கு.......வாழ்த்துக்கள்

ராகவன் said...

அன்பு பத்மா,

வேறுமாதிரியான கவிதை உங்களிடமிருந்து.... இதுவரை என் ஞாபகத்தில் இல்லை எதுவும்.... புதுவிதமான பொருள், ஆளுமை கொண்ட கவிதை.... சானை பிடிக்க வேண்டிய பற்கள்... நல்லாயிருக்கு....
ஆயின்
துரோகத்தின் சுவையறிந்து
ரத்தவிளாரான என் முகம் பொத்தி
விக்கித்து அமர்ந்த போது,
உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை....

இது மட்டும் எனக்கு கொஞ்சம் புரியலை.... பத்மா...
அன்புடன்
ராகவன்

தமிழ் உதயம் said...

கோபத்துடன் உண்மையும் கவிதையில் மிளிர்ந்தது.

மணிஜி said...

//உன் பின்விரல்களால்// ???

மணிஜி said...

தலைவியை நினைவுபடுத்துகிறது

sakthi said...

நீ உன் விஷப்பற்களை
சாணை பிடிக்கப் போயிருக்கலாம்
எனத் தெரிந்திருந்தும் கூட .


அருமை பத்மாக்கா

உங்கள் படைப்புகளில் இது புதுவிதம்

sakthi said...

ரத்தவிளாரான என் முகம் பொத்தி
விக்கித்து அமர்ந்த போது,
உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை...

யப்பா ....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல்லதோர் கவிதை...


ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

நேசமித்ரன் said...

நீரில் நிழல் விழுவதற்கும் ஒளி விழுவதற்கும் இடைப்பட இழையில்
ஒளிந்திருக்கிறது துரோகத்தின் வன் முகம் காந்தாரியின் கண்களைப் போல

நகங்கள் நெஞ்சில் அணிந்து கொண்டிருக்கும் உதிரக் கொண்டாடிகளின் நல்லுலகில்
இந்த கவிதையின் தேவை இருக்கத்தான் செய்கிறது

ரிஷபன் said...

கவிதையில் ஏதோ ஒரு நியாயமான கோபம்..

காமராஜ் said...

ஆழமான கவிதை.

Prabu M said...

//நீரில் நிழல் விழுவதற்கும் ஒளி விழுவதற்கும் இடைப்பட இழையில்
ஒளிந்திருக்கிறது துரோகத்தின் வன் முகம் காந்தாரியின் கண்களைப் போல//

துரோகத்தை அதன் ப‌துங்கு குழியிலேயே குறிவைத்து குண்டுவைத்துத் த‌க‌ர்க்கும் முய‌ற்சியா!!

ப‌த்மாவின் க‌விதையும் ச‌ரி... நேச‌மித்ர‌னின் பின்னூட்ட‌மும் ச‌ரி.... உண‌ர்வுக‌ளின் உள்ளும் புற‌மும் உண்மையும் பொய்யுமாய்க் க‌ல‌ந்து பிணைந்து கிட‌க்கும் எண்ண‌ற்ற‌ எமோஷ‌ன்க‌ளுக்கு இடையே "துரோகத்"தைத் தனிமைப்படுத்தி இவ்வ‌ள‌வு துல்லிய‌மாக‌ப் பிரித்தெடுக்கும் வார்த்தைக‌ள்... க‌விஞ‌ர்க‌ளின் பார்வையின் ஆழ‌மும் ஊடுறுவிப்பாயும் வேக‌மும் அதிக‌ம்தான்.... சிம்ப்ளி சூப்ப‌ர்ப்!!

அன்பரசன் said...

வரிகள் நல்லா இருக்குங்க..

ஸ்ரீராம். said...

//"உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை.."//

மனித உணர்வுகள்...

r.v.saravanan said...

வரிகள் நல்லா இருக்கு

Anonymous said...

பத்மா........வார்த்தைகளே பயமிருத்துகிறது..கற்பனையின் வீரியம் யப்பா........

Anonymous said...

பத்மா........வார்த்தைகளே பயமிருத்துகிறது..கற்பனையின் வீரியம் யப்பா........ இப்படியும் முகங்கள் இருக்கத்தான் செய்கிறது என்பதை நம்பியே ஆகவேண்டும்

Chitra said...

வித்தியாசமான கவிதைங்க....

bogan said...

கச்சிதம்.பவர்புல். நீங்கள் இனி முழுக் கவிதாயினி என்று சொல்லிக் கொள்ளலாம்.படம்தான் கொஞ்சம் திராபையாகத் தோன்றியது..

vasu balaji said...

யப்பா!!!

Ashok D said...

Hello பாத்து எழுதுங்கண்ணா... சின்னபயலுங்க நாங்க... பயந்திட்டோம்ல்ல...

பரவாயில்ல.. நல்லா முயற்சி பண்ணியிருக்கீங்க... இன்னும் கொஞ்சம் forceஅ.. try பண்ணுங்க :)

சிவராம்குமார் said...

நல்ல சொல்லாடல்!

ஹேமா said...

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் !

R.Gopi said...

பத்மா அவர்களே....

மனிதம்....மிருகம்....
மிருகம்....மனிதம்....

மனிதனுக்குள் மறைந்திருக்கும் அந்த மிருகத்தை வார்த்தையில் கொணர்ந்தமை மிக நன்று....

குட்டிப்பையா|Kutipaiya said...

miga arumai! kizithieryapadum kurrura mugangal :(

'பரிவை' சே.குமார் said...

ஆளுமை கொண்ட கவிதை.

நல்லா இருக்கு.

பாலா said...

கவிதை காட்சி படுத்தும் உதிரம் ஒழுகும் நகங்கள் என்றேனும் என்னுடையாதாகவும் இருக்கலாம் ,
கவிதை!!?? ரத்தம் ஒழுகும் சொற்சித்திரம் ...
நன்றிக்கா

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஒரு கவிதையின் வெற்றிடம் வாசகனுக்கு புதிரைத் தேடும் ஆர்வத்தை விதைக்கவேண்டும். இந்தக் கவிதையும் படமும் அலுப்பை விதைப்பதாகத் தோன்றுகிறது.அடுத்த கவிதைக்குக் காத்திருக்கிறேன் பத்மா.

Thenammai Lakshmanan said...

பற்களும் ஒன்றும் செய்ய முடியாது பத்மா.. நாம் காதில் வாங்காவிட்டால்..:))

உங்கள் புன்னகையை நான் அனுபவிக்கிறேன்,,:))

Roy Cherian Cherukarayil said...

Padma,
Really deep in meaning and usage of words....very powerful in impact.

Roy

வெட்டிப்பேச்சு said...

வார்த்தைகளில் வலி தெறிக்கிறது..

மொளனம் காக்கிறேன். இந்த துரோகம் - வன்முறை - மிகக் கொடிது.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

romba nalla irukunga!!!

விஜய் said...

பற்களை சாணை பிடிக்கச்செய்யும் உத்தி புதிது

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

கே. பி. ஜனா... said...

கவிதை நல்லாயிருக்கு!

uma said...

kavidhi super pinnitta ma very nice

மே. இசக்கிமுத்து said...

//உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை.... //


கலக்கிட்டீங்க!!!! அருமை!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நீ உன் விஷப்பற்களை
சாணை பிடிக்கப் போயிருக்கலாம்//

வித்தியாசமான் சிந்தனை! ஆனால்,
கற்பனை பயங்கரமாயிருக்கிறதே!

அ.வெற்றிவேல் said...

///உன் உடைந்த நகங்களும்
இனி வளராது போகும்
என்றறிந்து வந்தமரும் புன்னகையை
மறைக்கவே முடியவில்லை///

////நீ உன் விஷப்பற்களை
சாணை பிடிக்கப் போயிருக்கலாம்
எனத் தெரிந்திருந்தும் கூட///

நல்ல கவிதை..ம்ம் என்ன சொல்ல எல்லோரும் சொல்லியாச்சு...