Thursday, February 25, 2010

பொழுதோட்டல்

மற்றொரு பொழுது,
வேண்டியும் வேண்டாமலும் ...
துளாவும் மனம்  வானம் வரை போய்                                      
ஒட்டடை நினைவுகளை மட்டும் கண்டு  பின்                                   
நிறுத்தா கேள்விகளுக்கு தரும் பதிலுக்கு, பதில் ...
மீண்டும் ஒரு புதிய கேள்வி 
 விடையில்லா  உலகில் 
சிலந்தியின் வலை பின்னும் ஓசையும் 
மரண ஒலியாய்...

24 comments:

Ashok D said...

அட..அட..அட... பின்றீங்கலே :)

பத்மா said...

:) ashok

தினேஷ் ராம் said...

இதில் ஒரு செளகரியம் உள்ளது சித்தி.. விடை தெரியவில்லை என நாம் கவலையுறும் முன் சுழற்சி முறையில் கேள்விகள், 'நான்.. நான்' என முந்திக் கொண்டு வரும்.

உயிரோடை said...

கேள்வியென்னும் சில‌ந்தி வ‌லை... என்ன‌வொரு சிந்த‌னை. மிக‌வும் ர‌சித்தேன்

அன்புடன் நான் said...

நல்ல சிந்தனை... நல்லாயிருக்குங்க.... பாராட்டுக்கள்.

டவுசர் பாண்டி said...

கடசி ரெண்டு லைனு
பின்னிட்டீன்களே !! மறு படி மறுபடி பட்செம்பா !! தூள் டக்கரு .

பத்மா said...

டவுசர் பாண்டி அண்ணே ரொம்ப தேங்க்ஸ்

பத்மா said...

நன்றி உயிரோடை .தவறாமல் படிக்கிறீர்கள் .சந்தோஷமாக உள்ளது

பத்மா said...

பாராட்டுக்கு நன்றி கருணாகரசு

பத்மா said...

சௌகரியங்களை விட பதில் கிடைக்காத தவிப்பு தான் நிறைய அர்விந்த்

sigamani said...

அருமை அருமை பாராட்டுக்கள்

ராகவன் said...

அன்பு பத்மா,

ரொம்ப அழகான கவிதை... சிலந்தியின் வலை பின்னும் ஒலி கேட்கிறது இந்த கவிதையில்

அன்புடன்
ராகவன்

அம்பிகா said...

\\சிலந்தியின் வலை பின்னும் ஓசையும்
மரண ஒலியாய்...\\
அருமை.
கவிதை அருமையாய் இருக்கிறது தோழி.

vasu balaji said...

ரொம்ப நல்லாருக்குங்க

பத்மா said...

சிகாமணி மிக்க நன்றி

பத்மா said...

ராகவன் உங்கள கவிதைகளின் ரசிகை நான் ..தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

பத்மா said...

நன்றி அம்பிகா வரவுக்கு நன்றி கருத்துக்கு மீண்டும் நன்றி

பத்மா said...

வானம்பாடிகள் அய்யாவிற்கு மிக்க நன்றி

ரிஷபன் said...

ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதேனும் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது.. இந்தப் பெட்டியை உயிர்ப்பித்தால்.. இன்றைய தினம் உங்கள் சிலந்தி வலை..

பத்மா said...

நன்றி தியா

பத்மா said...

ஆச்சரியம் மகிழ்வாக இருந்ததா? வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

கவிதையின் ஓசை இன்னும் காதில்...

அண்ணாமலையான் said...

சூப்பர்

சிவாஜி சங்கர் said...

ஒட்டடை ஓட்டை சிக்கலில் சிறைபட்டு
கொடுக்கின் கொடுவிஷம் பாய்ச்சியிறக்கும்
ஈசலுக்கு தெரிய வாய்ப்பில்லை
சிலந்தியின் வலை "பொழுதோட்டலன்று
சூன்யமென்று.."