Sunday, February 21, 2010

பிரியா விடை


வண்ண ஆடை போத்திய
மலர்க்கூட்டம் நடுவே
முற்றிய மரமாய்
மலர்களின் பிரியாவிடையை
உள்வாங்கி சலசலக்கிறேன் .
அம்மலர்களிடமிருந்து பிரிந்த வெகுளித்தனம்
தன்னால் ஏற்பட்ட வெற்றிடத்தை
வெறித்து நோக்கி
வெளியேற இயலாது தவித்தது
சட்டென்று தெரிந்த கண்ணாடியை
ஆசையுடன் உற்று நோக்கினேன் ...
கொஞ்சம் என்முகத்திலும் ஒட்டிக்கொண்டதோ என்று..

(மகளின் பள்ளி பிரிவுபசார கூட்டத்தில் , சேலை கட்டிய சிறுமிகளை பார்த்த போது தோன்றியது .)

18 comments:

அன்பேசிவம் said...

அருமை, சேலை மலர்கள்

அன்புடன் நான் said...

நல்ல கவிதைங்க பாராட்டுக்கள்....

அந்த வானொலியை நிறுத்தி வைங்க... காட்டி கொடுக்குது.

Ashok D said...

மனம் மலரட்டும் :)

sigamani said...

அழகான வரிகள் எல்லோருடைய ஆசையும் அதான் நாமும் சின்ன குழைந்தை போல இருக்க வேண்டுமென்று ..

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல நினைவு மீட்டல் நல்லாயிருந்துச்சுங்க...!

பத்மா said...

நன்றி முரளி

பத்மா said...

ஆம் அசோக் மலரட்டும் ..நன்றி

பத்மா said...

ஆமாம் சிகாமணி தாயான பிறகும் தாயை தேடுது மனசு

பத்மா said...

நன்றி வசந்த் ..

டவுசர் பாண்டி said...

நல்லா கீது , நல்ல ரசனை கீது உங்களுக்கு தங்கச்சி !!

adhiran said...

//மகளின் பள்ளி பிரிவுபசார கூட்டத்தில் , சேலை கட்டிய சிறுமிகளை பார்த்த போது தோன்றியது//

after reading this words this poem gives mono-meaning. otherwise it is good one.

adhiran said...

mono- means single. otrai arththam tharukirathu enru sonnen.intha kurippukal mattum illaiyenraal intha kavithai vaasakanukku palavitha karpanaikalai aliththirukkum.

பத்மா said...

அதுசரி தான் ஆதிரன் ஆனால் என் சிந்தனையில் தோன்றிய காரணத்தை சொல்வது தெளிவாக்கும் அல்லவா?

தினேஷ் ராம் said...

கண்டிப்பாக ஓட்டிக் கொண்டிருக்கும், நமது ஏக்கங்கள்.

உயிரோடை said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ ப‌த்மா. வாழ்த்துக‌ள்

ரிஷபன் said...

கொஞ்சம் என் முகத்திலும்..

R.Gopi said...

அழகான வரிகளை கொண்டு நெய்யப்பட்ட அருமையான கவிதை... அதிலும் இந்த வரிகள், அப்பப்பா....

//அம்மலர்களிடமிருந்து பிரிந்த வெகுளித்தனம்
தன்னால் ஏற்பட்ட வெற்றிடத்தை
வெறித்து நோக்கி
வெளியேற இயலாது தவித்தது//

சூப்பர்....

//கொஞ்சம் என்முகத்திலும் ஒட்டிக்கொண்டதோ என்று..//

ஒட்டிக்கொண்டதா இல்லையா??

AMUDHAN JAYAKODI said...

your drawings of your poems are good, i like it...