Monday, February 8, 2010

கடைசி முத்தம்


உன் கபாலத்தில் வெடித்து சிதறிய
தீயின் நாக்கு
தேடி அலைந்து
மூலையில் ஒளிந்து இருந்த
என் உயிர் நெருப்பை அணைக்க முயன்று
தோற்று நீராய் மாறிவிட்டது .
அதில் என் காமத்தீ அணைந்ததால்
வந்த சாம்பல்
என் கண்ணீரோடு வினைபுரிந்து
திரும்ப தீயாய் கொழுந்து விட்டு
அகம் புறம் எரிக்கிறது
ஆனால் அது இறுதி வரை
நான் தந்த கடைசி முத்தத்தை மட்டும்
திருப்பித் தரவே இல்லை.

32 comments:

சே.ராஜப்ரியன் said...

நன்று ... !
www.ithutamil.com

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பத்மா!

பத்மா said...

நன்றி ராஜா

பத்மா said...

பா.ரா சார் நீங்களெல்லாம் வருகை தருவது பெருமையாக உள்ளது .நன்றி நன்றி

டவுசர் பாண்டி said...

உங்க ஏரியாக்கு வந்து ஜாயின்ட் பண்ணிட்டேம்பா !! இனி மேட்டு அடிக்கடி வரேன் !! உங்க கவிதை ரொம்ப நல்லா கீது !!
தொடருங்கள் .....

டவுசர் பாண்டி said...

kakitha oodam என்பதை .
"காகித ஓடம்" - இப்படி தமிழில் வைத்தால் நன்றாக இருக்கும் .

sigamani said...

very nice padma madam

பத்மா said...

நன்றி டவுசர் பாண்டி சார்.ஆரம்பத்தில ஆங்கிலத்தில வச்சுட்டேன் ,இப்போ மாத்தலமா தெரில .நீங்க தானே குரு .சொல்லுங்க .என்ன செய்யலாம்ன்னு

பத்மா said...

thanks sigamani...
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

டவுசர் பாண்டி said...

//நீங்க தானே குரு .சொல்லுங்க .என்ன செய்யலாம்ன்னு//


நீங்க சொல்றா மேரி எல்லாம் , அதிகமா ,எனுக்கு தெரியாதுங்க !! ஆனா ஒன்னு உங்க தலைப்பு kagithaoodam என்பதை , செட்டிங்க்ஸ்ல் மட்டும் தான் மாற்றப் போகிறீர்கள் அதனால் ஒன்றும்
ஆகாது !!

உங்கள் செட்டிங்க்ஸ் இல் தலைப்பு என்ற இடத்தில் , காகித ஓடம் என்று தமிழில் மாற்றி விட்டு save செய்து விடுங்கள் , அவ்வளவு தான் .

RAVI said...

பத்மா அவர்களே, முதல்முறை உங்கள் கவிதை இன்று காலை படித்தேன். நீங்கள் பொழுது போக்கிற்காக கவிதை எழுதுபவர் அல்ல என்பது உங்கள் கவிதை இல் தெரிகிறது. நான் கவிதை எழுதுபவன் அல்ல. ஆநாள் நல்ல கவிதைகளை இனம் கண்டு ரசிப்பவன். அந்த வகையில் உங்கள் கவிதை சூப்பர். உங்கள் திறமை இப்பொது " குடத்தில்(ப்ளாக் இல்) இட்ட விளக்கு " ஆக இருப்பதாக நினைக்கிறன். நீங்கள் உலகம் அறிந்த கவிதை எழுதுபவர் ஆக சீக்கிரம் வருவீர்கள். என் வாழ்த்துகள். ரவீந்திரன், சென்னை

நேசமித்ரன் said...

நல்ல முயற்சி .. தொடர்க !

Sugumarje said...

கடைசியில் சொல்ல வரும் கருத்துக்காக, முதலிலிருந்து வரும் வார்த்தைகளின் விவரணைகள் நன்று. ஒரு வேண்டுகோள்...கவிதையை அதன் போக்கில் விட்டுவிட்டால் இன்னும் சிறக்கும். (Means Don't try to complete with in some of words...)

*டவுசர கையில புடுச்சுருக்காருல்ல, அவ்ரு தாம்பா லைன் குட்த்தாரு..

பத்மா said...

நன்றி நேசமித்திரன் சார்

பத்மா said...

நன்றி ரவீந்திரன்

பத்மா said...

நன்றி சுகுமார் ஜி
இன்னும் முயற்சிக்கிறேன் .
நன்றி நன்றி

உயிரோடை said...

பத்மா நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

அண்ணாமலையான் said...

பிரமாதம்.. அசத்தலா இருக்கு

butterfly Surya said...

தொடருங்கள்.

பத்மா said...

முயற்சிக்கிறேன் சூர்யா நன்றி பல

பத்மா said...

நன்றி அண்ணாமலை .

பத்மா said...

உயிரோடை நன்றி ....

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க இந்த கவிதை.

பத்மா said...

கமலேஷ் வருகைக்கு நன்றி..
அகநாழிகை வரவால் சிறப்புற்றது ஓடம் .நன்றி

ஆடுமாடு said...

நல்லாருக்கு.

மே. இசக்கிமுத்து said...

கவிதை அருமை, தொடருங்கள்!!!

tt said...

அனைத்துக் கவிதைகளையும் படித்து விட்டேன்.. நன்றாக இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள்..

Sanjai Gandhi said...

//நான் தந்த கடைசி முத்தத்தை மட்டும்
திருப்பித் தரவே இல்லை. //

அதை கடைசின்னு நீங்க சொல்லி இருக்கக் கூடாது.. அதான் தரலை போல.. :))

சரி சரி.. சும்மா.. சும்மா..

ரொம்ப அனுபவிச்சி எழுதி இருக்கிங்க போல.. நல்லா இருக்கு..

Ashok D said...

நல்லாயிருக்குங்க க.மு. :)

uma said...

All are very nice kavithai madam but the last kiss is fantic where where all this days so heart touching feeling lines

Shangaran said...

fantastic lines.
excellent.