Monday, August 10, 2009

ஒற்றை மீன்


சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
சுவாச மூச்சு தவிக்க ,
கண்ணெதிரே தோன்றும்
விந்தைவெளி மயக்க ,
கால இடைவெளியில் வந்து விழும்
சிறு துகள்களில் உயிர் பிழைக்க......
பளபளக்கும் பளிங்கு சூழலும்........
வளமேதுமில்லா செயற்கை உயிர்களும் ,
வாழுமிடம் என்றாகி......
சேர்ந்திருந்தோர் கண்ணெதிரே
கனவாய் கலைந்தது கண்டும் .....
சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
என் வீட்டு மீன்தொட்டியில்
ஒற்றைமீன்
என் மனம் போல.

5 comments:

மே. இசக்கிமுத்து said...

அன்பு தோழி பத்மா,
நீண்ட இடைவெளிககு பின்னர் வலைபதிவின் பக்கம் வருகிறேன். அதுவும் உங்களின் பிண்ணுட்டம் க‌ண்டு.

நீங்கள் சொன்னது போல் கண்ணாடி குப்பியில் சிக்கிய மீன் போல என் மனமும் துடித்துக்கொண்டு தான் இருக்கிறது நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்று. அதற்கான கரு பொருளை என் நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எழுத வேண்டும். ஆனால் பாருங்கள் இந்த வருடம் தொடங்கியது முதல் இதற்கு ஏதாவது தடை வந்து கொண்டே இருக்கிறது. அலுவலகத்தில் நிறைய வேலைகள், சில சொந்த பிரச்சனைகள், சில நேரம் என்னுடைய சோம்பேறித்தனம். இவை எல்லாவற்றையும் தாண்டி பதிவுகளை வழக்கம் போல எழுத வேண்டும் என்னுள் இருக்கிறது. மிக விரைவில் எனது பதிவுகளை படிக்கலாம்.

உங்களது கவிதைகள் ஆழ்ந்த கருத்தோட்டம் கொண்டவைகளாக இருக்கிறது. ஒரு முறை அல்ல இருமுறை சில சமயம் பலமுறை படித்து பார்க்கும் போது தான் அதன் உள்ளோட்டத்தை உணர முடிகிறது. ஒற்றை மீன் முட்டி மோதினால் வீழ்ந்துவிடும், நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து செயல்பட்டால் விடுபட்டுவிடலாம்.

-இசக்கிமுத்து
emuthutut@hotmail.com

sowmi narayanan said...

Hi Chance less., I enjoy a lot really Padma., very nice Kavithal.,

இளவரசன் said...

Hi Padma,

Nice kavidhai...ennodu uravaadi kondirudhavan tholaidhupona pozhudhu ...unnai pol naanun ottrai meenaga suzhandru suzhandru...uzhandru uzhandru!!

Padma neraiya ezhudhunga..

Sasikumar.

sigamani said...

சுழன்று சுழன்று ,உழன்று உழன்று ,
வெளியேற வகையின்றி ,
என் வீட்டு மீன்தொட்டியில்
ஒற்றைமீன்
என் மனம் போல.
nalla varigal vaasikkum pothu thanakkagavee ezhutha pattathentru thontrum varigal vaazhthukkal

kovai sathish said...

வித்தியாசமான மீன்...தான்