Wednesday, May 7, 2008

புரிந்ததா?

எதிலும் லயிக்காத
இலவம் பஞ்சாய் மனம்
இலக்கிலாமல் ஓடி ஆட
இலக்கில்லா வேதனையில்
ஆழ்மனம் தேடிவாட....
எதில்தான் லயிக்கும்
என ஆறறிவு கேள்வி கேட்க......
தேடலின் சுமையொடு
தூங்கா விழிகள் ..............
வேண்டாம் என அறிவு மாற்றி வைக்க ,
வேண்டும் என இதயம் இரங்கி நிற்க,
ஆம் இல்லை என மனம் பிரித்து பேச ,
தேடலின் விடையாய் ..........
என் சிரிப்பின் விலையாய்...........
அருகிலேயெ இருப்பினும்
நெடுந்தூரப் புள்ளியாய் நீ..............
என் தேடலே
தேடல் புரிந்ததா இப்பொதாவது?

13 comments:

மே. இசக்கிமுத்து said...

தேடலிலும் ஒரு சுகம் உண்டு, அதை அனுபவித்தவர்களுக்கு தான் அச்சுகத்தை பற்றி சொல்ல முடியும்!!!

நெடு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை படிக்கிறேன், சகோதரியை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த மகிழ்ச்சியோடு!!

M.Rishan Shareef said...

//தேடலின் விடையாய் ..........
என் சிரிப்பின் விலையாய்...........
அருகிலேயெ இருப்பினும்
நெடுந்தூரப் புள்ளியாய் நீ.............. //

அழகான கவிதை பத்மா அம்மா.
மனித வாழ்வு தொடரும் கணம் தோறும் தேடலும் நம்மைத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
தேடலுக்கு விடை கண்ட பொழுதினைக் குறித்து வீற்றிருக்கிறது உங்கள் கவிதை.

இரண்டு மாதங்களாக எதுவும் எழுதக் காணோமே..என்னவாயிற்று அம்மா ?

Kannamma said...

Arumaiya na oru unarvu...thedal.... thedal endrume oru sugam than... ungal kavidai anaithume arumai.....

Anonymous said...

romba amithiya,narukkunu suvaiya irukkunga kavithaium,unga biodatavum

Anonymous said...

unga kavitha ellam nalla iruku madam, varigal nall use panni irukeenga superb!!!!!!!!!!! came from ur orkuta/c in pirya's

காரூரன் said...

மிகவும் அழகாய் வார்த்தைகளை வடித்திருக்கின்றீர்கள்! நீண்ட நாட்களின் பின் தான் வலைப்பக்கம் வந்து வாசிக்கின்றேன். வாழ்த்துக்கள். இசக்கிமுத்து கூறியது போல் தேடலும் சுகமே!

மே. இசக்கிமுத்து said...

எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Arumugha said...

nalla kavithai.

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்குங்க!

Selly Nat said...

Wonderful Padma..your poems are always inspiring.
The selection of words are the highlights and it is always fresh.
Warm Regards
Kindly pen many more poems...
It does bring in Tranquility.
Madhavan Natarajan.

M.Rishan Shareef said...

நீண்ட நாட்களாக உங்கள் தமிழ்க்கவிதையெதையும் காணோமே அம்மா?

Anonymous said...

பத்மா உங்கள் பதிவுகள் அருமை..வேறு என்ன சொல்ல ?

arun

Unknown said...

தேடலின் விடையாய் ..........
என் சிரிப்பின் விலையாய்...........
அருகிலேயெ இருப்பினும்
நெடுந்தூரப் புள்ளியாய் நீ..............
என் தேடலே purinthathu padhma very nice