எங்கோ ஒலிக்கும்
ஒரு சிரிப்பொலி
யாரோ சொல்லும்
ஒரு வார்த்தை
தூரத்தே தெரியும்
உடையின் நிறம்
என்றோ படித்த
வரிகளில் நினைவு
இதில் எல்லாம்
தெரியும் உன்னை
மறக்கத்தான் முயல்கிறேன்......
எனினும்
உன்னுருவாய் என்னருகே
வந்தமர்ந்து
உன் கண்ணால் எனை நோக்கும்
நம் கண்மணியை
காணும் போதெல்லாம்
கல்லாய் வந்து அடைக்குதே
உன் நினைவு
அதை எங்கணம்
களைய சொல்?
7 comments:
நினைவுகள் பற்றிய உங்கள் கவிதைகளை வாசிக்கும் போது என்னையும் நினைவுகள் எங்கோ கொண்டு செல்கின்றன..எங்கு சென்று நிறுத்துமோ?
உஷ்,
//உன்னுருவாய் என்னருகே
வந்தமர்ந்து
உன் கண்ணால் எனை நோக்கும்
நம் கண்மணியை
காணும் போதெல்லாம்
கல்லாய் வந்து அடைக்குதே
உன் நினைவு
அதை எங்கணம்
களைய சொல்?//
உங்கள் உணர்வுகளை அருமையா சொல்லி இருக்கிங்க , வெறும் வார்த்தைகள் அல்ல அவை என்பதை உணர்கிறேன்.
இப்போதெல்லாம் இப்படிப்பட்டக்கவிதைக்களாகவே அதிகம் வருகிறே... ரொம்ப தீவிரமாக சிந்திக்க ஆரம்பிச்சுட்டிங்களோ?
கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்து ஒரு மொக்கைப்பதிவும் போடவும் :-))
kavignar padma avargalukku,
Thangalin 'Ninaivu' kavidhai ennull urangikidhandha ethanaiyo azhagana Nenaivugalai vizhika cheidhuvittadhu .
Nandri,
Sasi.
இசக்கிமுத்து, வவ்வால்,சசி,மிகவும் நன்றி.உங்கள் ஊக்கம் என்னை உயர்த்தும்.
மொக்கை பதிவா itk?கூடிய சீக்கிரம் எதிர் பாருங்கள்
பத்மா.....
maradhi iraivan kodutha oru pokkisam.. ivvisayathil maradhi ungalai thazuvikkollattum..
padma, tell me something, are these situations imaginary or u experienced them..its like, looking into the mirror and seeing a reflection ...
உன்னுருவாய் என்னருகே
வந்தமர்ந்து
உன் கண்ணால் எனை நோக்கும்
நம் கண்மணியை
வரிகளில் இயல்பாய் ஒரு கட்டுக்கோப்பு..
Post a Comment