Monday, March 3, 2008

கிளைக்கும் மனம்

அழிக்க இயலா

எதிர்த்துக் கிளைக்கும்

மண்புழுவாய்

என் மனம்!

யாரேனும் சிதைக்க விரும்பி

பாறையைப் போட்டால்......

கீழே மண் பறித்து

சந்ததி வளர்க்கும்!

வெட்டு ஒன்று துண்டு இரண்டென

வெட்டியும் போட்டால்......

வாலுக்குத் தலையும்,

தலைக்கு வாலும்,

தழைத்து வளரும்!!!!

தன்னுள்ளே

ஒரு கணம் ஆணாய்.....

மறுகணம் பெண்ணாய்.....

ஆதிக்கம் நடத்தும்!

ஒழிந்தது சனியென

மறந்திடும் வேளை,

சிறு துளி மழை வி

சிலிர்த்துச் சீறும்!

ஆக

அழிக்க இயலா.....

நிலைத்து வாழும்

மண்புழுவாய்

என் மனம்

பிழைத்து நிற்கும்!

3 comments:

மே. இசக்கிமுத்து said...

**அழிக்க இயலா..... நிலைத்து வாழும் மண்புழுவாய் என் மனம் பிழைத்து நிற்கும்!**

மன உறுதியை யாராலும் வெல்ல முடியாது!!! அருமை!!

balag said...

"அழிக்க இயலா
எதிர்த்துக் கிளைக்கும்
மண்புழுவாய்
என் மனம்!"

Very True. This poetry expresses the helplessness of the meak in conquest of their mind. This is one feat that we lack but the masters had accomplished.

sigamani said...

அழிக்க இயலா.....

நிலைத்து வாழும்

மண்புழுவாய்

என் மனம்

பிழைத்து நிற்கும்.....azhagana sinthanai asaika mudiyatha mana uruthi nenjai thodum varigal arumai im jose