Wednesday, December 5, 2007

மாயை!

கதைப்பது பெண்ணென
தெரிந்தபின்பு
முலையளவு கேட்கும்
மூடர்கள் கூட்டம்.

நட்பு நாடிவருபவளீடம்
காமவலை வீசும்
கயவர்கள் கூடம்

தனித்திருக்கும்
பெண் மனம்பேதைமையுற
பேசி மயக்கும்
நரிகளின் வாசம்

இலக்கியமும்,இலக்கணமும்
பெண்ணிற்கப்பாற்பட்டதென
சதையால் பெண்ணளக்கும்
சவுக்கடி மாடம்

இவை அனைத்தும்
அறிந்தும்
தினம் தினம்
தேடுதல்
நிறுத்தா பயணம்!!

நடுவில் உதிக்கும்
சில நம்பிக்கை
நட்பும்
நாளாவட்டம் நலிந்து
காமம் பேசி....
காரணம் கூறாது
விட்டொழியும்.

மோட்டுவளை நோக்கி
விழியில் நீருடன்
உண்மை நட்பு நாடி
மனம்
நிழலொடு பேசும்!!

வேம்பு கசப்பென
அறிவு உணர்த்தியும்
வேப்பம்பழ இனிப்பு
நாடும்
பேதையுள்ளம்.

மனம் கூறும் வழி போகாது
அறிவு வழி செல்ல
அழியும் மாயம்
வாழ்வு
அமிர்தே ஆகும்.

16 comments:

Anonymous said...

Great one...today's life is brought straight into your eyes....nice....hatsoff Padma...

M.Rishan Shareef said...

மோட்டுவளை நோக்கி
விழியில் நீருடன்
உண்மை நட்பு நாடி
மனம்
நிழலொடு பேசும்!!


நிஜம்தான்..
உண்மை அன்பென்றும்,பெறுதற்கரிய நட்பென்றும் போற்றிப் பெரு விருட்சமாய் இதயத்தில் வளர்த்துவைப்போம்.ஓர் நாளில் தெரியவரும் நண்பனாய் நடித்துத் துரோகியாய் மாறியவனின் சுயரூபம்.அந்நாளில் இதயத்திலிருந்து உயிர் பிரியும் வேதனையோடு அவனைப் பிடுங்கி எரிய பெருமாழக் குழிபதியும்.விழிநீர் மட்டுமே சொந்தமாக வாழ்க்கையே பெரும் ஏமாற்றமாகத் தோன்றும்.
எனக்கும் இதே அனுபவங்கள் நிறைய உண்டு.தன் நிழல் கூட ஏமாற்றும் இக்காலத்தில் நிஜ நண்பர்கள் கிடைப்பது மிகவும் அரிது.
மிக அருமையான கவிதை வரிகள்.பாராட்டுக்கள்.

சிவக்குமார் said...

இணையம் ஒரு வேப்பந்தோப்பு கூட இல்லை. அடர் காடு. விருட்சங்களின் நிழல் கிடைக்கும் அதே நேரத்தில் புதருக்குள் இருந்து சிங்கமோ, கரடியோ எட்டிப் பார்க்கும் விசித்திரமும் சாத்தியமே. நான் சிங்கத்தையோ, கரடியையோ குறை சொல்ல மாட்டேன். அது அவைகளின் இயல்பு. காமச்சிங்கம், பெர்வர்ட் கரடி இப்படி ஏசுவதில் என்ன கிடைக்கப் போகிறது.

ஒரு தெளிவான அளவுகோலுடன் இணையத்தினுள் நட்பை நாடினால் தொடர் தோல்வி தவிர்த்து வேறெதுவும் கிடைக்காது. இங்கே மனிதர்களை சந்திக்கலாம், அவ்வளவே.

உண்மை, முழுமைகளை இந்தக் கவிதை வலியுறுத்துகிறது. எனக்கு முழுமைகளில் நம்பிக்கை இல்லை. எல்லாம் பின்னங்கள் (fractions). பின்னங்களின் பின்னங்கள். சூழல், மனநிலைகளைப் பொறுத்து அந்த பின்னங்கள் மாறியபடியே இருக்கின்றன.


இந்தக் கவிதை சுய அனுதாபம் கொண்ட ஒரு மெலிவான குரல்.

Divya said...

\\மனம் கூறும் வழி போகாது
அறிவு வழி செல்ல
அழியும் மாயம்
வாழ்வு
அமிர்தே ஆகும்.\

அருமையான வரிகள்!
பாராட்டுக்கள்!!!

balag said...

You've got an amazing ability to coin words that would shake people. This poetry hits like a ton of brick.

This poetry reflects the cross section of the perverted minds wandering the alleys and internet. But, they cant resist revealing themselves. While meeing in person, they wont look at the eyes but search for curves. Like wise is their behaviour online too. Their words soon lead to mensuration.

I too thought, why search for relationships in spite of this. Good poetry. Keep going.

Anonymous said...

sun rises every day!!like wise, there will b gud days in life!!!Natpu enbadhu very vaarthaigal alla!!!adarkum unarvukal undu!!!!!Maayaii enumbodu adu vaazhkaiyum serthu thaan enbadu ungalukku theriyaada???

kuthubg said...

menmaiyaai kavithai sonnaa neenga..ippadi savukkadi thanthu irukkenga..

மே. இசக்கிமுத்து said...

//மனம் கூறும் வழி போகாது
அறிவு வழி செல்ல
அழியும் மாயம்
வாழ்வு
அமிர்தே ஆகும்//

Really nice words! "Manam Pona Pokkallam Poga Vendaam" Kondrai Vendhan seiyulil padithathu ninaivukka vanthathu!!

A.K.Paranthaman said...

கதைப்பது பெண்ணென
தெரிந்தபின்பு
முலையளவு கேட்கும்
மூடர்கள் கூட்டம்.

நட்பு நாடிவருபவளீடம்
காமவலை வீசும்
கயவர்கள் கூடம்

தனித்திருக்கும்
பெண் மனம்பேதைமையுற
பேசி மயக்கும்
நரிகளின் வாசம்


That is true. But i think its true for both the sexes.
We need to be careful in selecting friends. I am just wondering: i am not sending mails to my own good friends who are with me for a very long time... but just searching for friends in orkut. Is it not strange?
Even this is a MAAYAI - right?

But i need to appreciate for the originality of the kavithai. Not only that, the words are playing with you.

Ungalin kavithai etho ennudaiya vaalvile nadantha sila visayangalukakave eluthapattatho ena ennai ennamida vaikirathu... anal athu unmai...

Vettai ada mirukangal thayarai irukindrana.
Mirukangal irupathuvum theriyum... intha pulli maanirku...
Maan veru vali parka solli thara villai naam.....

பத்மா said...

sridhar,rishan,siva,divya ,bala,gulam,isakkimuthu and paranthaaman,
anaivarukkum romba nandri.
na romba bayanthen intha kavithai upload panna,
vaarthaigal konjam kochai,
melum pidikatha idathil een irukka vendum endra marumozhi varum endru theriyum.
aanalum,nam konjam maayai kalantha ulagil thaane irukirom.
anaivarukkum mikka nandri.
ungal comments ennai melum ezhutha thoondukirathu.
nandri nandri

AMEER said...

நட்பு நாடிவருபவளீடம்
காமவலை வீசும்
கயவர்கள் கூடம்

தனித்திருக்கும்
பெண் மனம்பேதைமையுற
பேசி மயக்கும்
நரிகளின் வாசம்
enna oru unmaiyana varigal.......
miga arumai.....
vazlthukkal........

Jeggy said...

பரமபதத்தில்
பாம்புகளும் உண்டு
ஏணிகளும் உண்டு

ஏணிகளை எட்டிப் பிடியுங்கள்
பாம்புகளை கொத்தி தள்ளுங்கள் !!

Jeggy said...
This comment has been removed by the author.
Dhivya Dharsanam said...

Really well done Padma...
not only the subject u write about... also the words handled by you shows you are a good reader...
Keep going...

sigamani said...

நடுவில் உதிக்கும்
சில நம்பிக்கை
நட்பும்
நாளாவட்டம் நலிந்து
காமம் பேசி....
காரணம் கூறாது
விட்டொழியும். nanbergal privai menmayaga azhuthamaga solli irukkireergal arumai

sakthi said...

கவலைவேண்டாம் சகோ அதான் நான் வந்திட்டேனே!!!!