Wednesday, July 25, 2007

விட்டுக்கொடுத்தல்

'தான்' என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை.
உண்மை! சிறிது நகைச்சுவையாகக் கூறினால், குழம்பிய வாழ்க்கைலிருந்து தானை எடுத்துவிட்டால் அது ரச்மாகிவிடும்.
தான் என்ற எண்ணம் தலை தூக்கும் இடங்கள் தான் எத்தனை எத்தனை?
வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார் மருமகள் உறவிலாகட்டும்,க்ணவன் மனைவி இடத்தே ஆகட்டும்... இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த எண்ணமே காரணம்.
நண்பர்கள் இடையே பிரிவு ஏற்படுவதும் இந்த எண்ணதினால் தான்.
இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க நம்முள் ஏன் இந்த தலைக்கனம்?விட்டுக்கொடுத்தால் வேதனை இல்லை.
வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது.
விட்டு கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை.
அடைவது தான் நிறைய .
நம் உறவை பலப்படுத்துகிறோம்,நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம்.
பகைமையை விரட்டுகிறோம்.
ஆக விட்டு கொடுத்தலில் விவேகம் உண்டு.
வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு.
ஒரு மாறுதலுக்காக அடுத்த முறை 'தான்' என்ற எண்ணம் தலைதூக்கும் போது சிறிது விட்டு கொடுத்து பார்க்கலாமா?
சந்தோஷக் காற்று சூழட்டும்.
நட்புடன்
தோழி பத்மா

7 comments:

Anonymous said...

நிஜமான நேசத்தை நிறுத்தாமல் தொடர, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை..
அருமையான, அற்புதமான, உண்மையான வரிகள்.
தொடரட்டும் உங்கள் பணி...

ராதா செந்தில் said...

சரியாகச் சொன்னீர்கள் பத்மா. தொடர்ந்து எழுதுங்கள்.

மே. இசக்கிமுத்து said...

நன்றாக சொன்னீர்கள் தோழி!! மேலும் "விட்டுக் கொடுத்தால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுப்போமே!!!"

மங்களூர் சிவா said...

//
ஒரு மாறுதலுக்காக அடுத்த முறை 'தான்' என்ற எண்ணம் தலைதூக்கும் போது சிறிது விட்டு கொடுத்து பார்க்கலாமா?
//
தான் என்ற எண்ணம் போனால் பிரச்சினைகள் இருக்காது சரிதான் ஆனால் லைப் 'சப்பு'னு சுவாரசியம் இல்லாம போயிடாது??

ELEVATION said...

vittu koduthal

you have understood the life.. clearly..

only matured people have this kind of thought

kuthubg said...

namba mudiyavillai...
ungalukkul iththanai
thiramaihala!!!!
vaazthukkal.

காரூரன் said...

உங்கள் கவிதைகளில், ஆக்கங்களில் உங்கள் மனம் பண்பட்டுள்ளது தெரிகிறது. நிச்சயமாக என் பதிவுகளூம் பிடிக்கும் என்று நம்புகின்றேன். உங்களது விமர்சனம் கேட்க ஆவலாய் உள்ளேன்
http://akathy.blogspot.com

வாழ்த்துக்கள்.