Saturday, March 24, 2012

ஓவியப் பார்வை(இன்று கல்கியில் வெளியானது )

கோடுகளும்
வளைவுகளும்
வண்ணங்களும்
நிறைந்த ஓர் ஓவியம் என் முன்னே !
அவ் வண்ணங்களின் பின் ஒளிரும்
எதோ ஒன்றை
உணர முயன்று
வெறித்து நிற்கிறேன்.
மற்றவர்கள் கடந்து போய்கொண்டே இருக்கின்றனர் ....
புரிந்ததா புரிந்ததா
என்ற கேள்வி
அவ்வோவியத்தின் வளைவுகளின் நடுவே
ஒலிப்பது போல் இருக்கிறது.
கோடுகளை படிக்க முயன்று தளர்கிறேன்
கண் விழிக்கையில்
என் முன்னே
இன்னும் அவ்வோவியம் தான் 
இப்பொழுது என்னையது வெறித்து நோக்கியபடி
மற்றவர்கள் மட்டும் இன்னும் கடந்து போய்கொண்டே இருக்கின்றனர்  



5 comments:

ரிஷபன் said...

கண் விழிக்கையில்
என் முன்னே
இன்னும் அவ்வோவியம் தான்

இன்று கண் விழித்தது அந்த ஓவியத்தில்தான். இன்றைய காலைப் பொழுதை கவிதையாக்கியது !

ஹேமா said...

வாழ்த்துகள் பத்மா.சில சிந்தனைகள் இந்தக் கவிதைபோலவே !

ஹ ர ணி said...

இப்பொழுது என்னையது வெறித்து நோக்கியது....

உண்மைக்கவிதையின் தரிசனக்காட்சி ஓவியமாய்.

அருமை பத்மா. வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி said...

ஓவியத்துக்கும் பார்வைக்குமான பரஸ்பர புரிதல்கள் நிலைகொள்ளும் நாளில் மற்றவர் பற்றிய பிரக்ஞைகளும் மறைந்துபோகக்கூடும். அழகிய பார்வை பத்மா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

FANTASTIC!!!!