Tuesday, May 11, 2010

ஓடிக்கொண்டே இருப்பவை

"உனக்கு என்ன வேணும்ன்னு நீ தான் தீர்மானிக்கணும்" ! அனேகமாக என்னுடன் பேசுபவர்களின் தொனி இந்த அளவில் தான் இருக்கிறது .முத்தாய்ப்பாக நேற்று என்னை லிஸ்ட் போடச்சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பு .

என்ன வேண்டும் என யோசித்தே காலம் கழிந்து விடுமோ என்ற பயமும் வரத்துவங்கியாயிற்று.கண்ணாடியில்  உற்று நோக்கும் நேரம், அகமும் புறமும் எத்தனை வேறுபட்டு நிற்கின்றன என்ற எண்ணம் வராமல் போவதில்லை

மனதில் இருக்கும் நான்  என்ற பிம்பத்துடன் கண்ணாடியின் முன் நிற்பது பொருந்தவே இல்லை .நிஜத்தை பார்க்கும் அனைவரும் நிஜமான நிஜத்தை மிஸ் பண்ணிவிடுகிறார்கள் .(அப்படி நினைத்துக் கொள்கிறேனோ?)
இதற்கு உடனே யாராவது  சொல்லலாம்    bring out your self  .இதெல்லாம்  புரியவே  இல்லை  

இந்த நிஜ என்னை யார் கண்டு பிடிப்பார்கள் ? எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? வேண்டும் தானே அப்போது தானே இந்த  misfit will fit !

இப்படி  காலை முதல் மாலை வரை  நினைத்துகொண்டே  ஒரு  நாள் ஓடிவிடுகிறது.

நிஜமாகவே நான் யார்?
இந்த கேள்வியை கேட்கும் போது வரும் பதிலானது மிகவும் பயம்  தரக்கூடியதாகவும் ,சில சமயம் பிறரால் அருவருக்கக் கூடியதாகவும் இருக்கிறது .

மனது பீத்த பெருமையை பற்றிக்கொள்கிறது .அருவருப்பும் அதற்கு உகந்ததாகவே இருக்கிறது. 

எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? யோசிக்கணும்
ஏன் நிச்சலனமாய் இருக்க இயலவில்லை ? முயலணும்
இதெல்லாம் சாதித்தால் என்ன ஆகும் ?புரியவில்லை
ஆனால்  இவை சுற்றி வதைப்பதை நிறுத்த இயலவில்லையே !
ஒரு வேளை  இவை நின்று போனால் அன்று தான்  நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ?

42 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

என்ன விசயம்ன்னு தெரியலையே.

Anonymous said...

குழப்பத்தில் இருக்கீங்கன்னு தெரியுது...சமயத்தில் நாங்களும் இப்படி தான்....

Chitra said...

எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? யோசிக்கணும்
ஏன் நிச்சலனமாய் இருக்க இயலவில்லை ? முயலணும்
இதெல்லாம் சாதித்தால் என்ன ஆகும் ?புரியவில்லை
ஆனால் இவை சுற்றி வதைப்பதை நிறுத்த இயலவில்லையே !
ஒரு வேளை இவை நின்று போனால் அன்று தான் நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ?




....... நல்லா எழுதி இருக்கீங்க. அருமை.

Anonymous said...

DONT BE FIRGHTENED BE AS YOU ARE THAT IS LIFE VERY NICE IMGANESATION BUT NO IN PRATICE

ஜெய்லானி said...

நான் கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கோ ?

vasu balaji said...

/நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ? /

நானுள் இருக்கும் நான் மரித்தாலும் இந்தக் கேள்விகள் அவசியமில்லை:) Nice thoughts

சுந்தர்ஜி said...

ஹா!என்னாச்சு பத்மா?ஏன் இத்தனை சிக்கல்?நாம் சென்றடைய விரும்பும் இடத்தைத் தீர்மானித்துவிட்டால் பயணம் தெளிவாகிவிடும்.நான் என்ற நான் இல்லாது போனபின்தான் வாழத் தொடங்கியிருப்போம்.

Ashok D said...

வேலை வெட்டியில்லன்னு புரியுதுண்ணா... கொடுத்துவெச்சவங்க நீங்க...

ஒரு நாளைக்கு 20 hrs உழைக்கவேண்டியிருக்கு.. கடந்த 15 வருசமாவே.... see no sat & sunday too

Ashok D said...

நமக்கு புட்சத நாம செய்யனும்...அதாங்க matteru...

அப்பாளிக்கா... சந்தோஷமாயிருக்கனும்... மூச்சு விடறதே ஒரு சந்தோஷமான விஷயம்தானுங்கள :)

விக்னேஷ்வரி said...

ரொம்பக் குழம்பியிருக்கீங்களோ...

எல்லாரும் இதே குழப்பங்களோடு தான் நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஹேமா said...

பத்மா நிறைய யோசிக்கிறீங்க.அப்போ எல்லாம் குழப்பம்தான்.எதையும் உடனே உடனேயே விட்டிட்டு மூச்சு விட்டு அடுத்த காரியத்தில் இறங்குங்க.இல்லாவிட்டால் பைத்தியமே பிடிக்கும் தோழி.

Priya said...

//மனதில் இருக்கும் நான் என்ற பிம்பத்துடன் கண்ணாடியின் முன் நிற்பது பொருந்தவே இல்லை//....என்னாச்சு பத்மா?!

//"ஓடிக்கொண்டே இருப்பவை"//.... ஓடிக்கொண்டே இருப்பவையை நிறுத்தி யோசிச்சா இப்படிதானோ?!!!!

பனித்துளி சங்கர் said...

இன்றுமுதல் எனக்குள் என்னை தேடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி

ரிஷபன் said...

வேணாம்.. மனசு இப்படித்தான் அலைக்கழிச்சுரும்.. சும்மா வாங்க.. அடுத்த டானிக் படைப்போட..

முகுந்த்; Amma said...

என்னாச்சு பத்மா, ரொம்ப குழப்பமோ?

பத்மா said...

சைவகொத்துப்பரோட்டா said...

என்ன விசயம்ன்னு தெரியலையே.


சும்மா மனசில ஓடின எண்ணங்கள் பரோட்டா

பத்மா said...

தமிழரசி said...

குழப்பத்தில் இருக்கீங்கன்னு தெரியுது...சமயத்தில் நாங்களும் இப்படி தான்....



குழப்பம்னு சொல்ல முடியாது தமிழ் .எதோ சிந்தனை அவ்ளோதான்

பத்மா said...

thanks anonymous

பத்மா said...

நன்றி வானம்பாடிகள்

பத்மா said...

ஜெய்லானி said...

நான் கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கோ ?

அப்படிலாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை ஜெய்லானி

பத்மா said...

சென்றடையும் இடம் தான் சிக்கல் சுந்தர்ஜி .
all in the game

பத்மா said...

அசோக் அண்ணன் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்

பத்மா said...

கூட வருவதற்கு நன்றி விக்னேஸ்வரி

பத்மா said...

சரி ஹேமா .அப்படித்தான் செய்கிறேன்

பத்மா said...

ஒண்ணும் ஆகல பிரியா
just like that

பத்மா said...

நன்றி ஷங்கர்

பத்மா said...

ரிஷபன் said...

வேணாம்.. மனசு இப்படித்தான் அலைக்கழிச்சுரும்.. சும்மா வாங்க.. அடுத்த டானிக் படைப்போட..


வந்துடுவேன் ரிஷபன்
அதான் பலமும் கூட

பத்மா said...

முகுந்த் அம்மா said...

என்னாச்சு பத்மா, ரொம்ப குழப்பமோ?

அப்படியும் சொல்லமுடியாது .தெரில போங்க

Ashok D said...

//பத்மா நிறைய யோசிக்கிறீங்க.அப்போ எல்லாம் குழப்பம்தான்.எதையும் உடனே உடனேயே விட்டிட்டு மூச்சு விட்டு அடுத்த காரியத்தில் இறங்குங்க.இல்லாவிட்டால் பைத்தியமே பிடிக்கும்//

ஹேமா...குழப்பாத.. அவங்க கரெக்டாதான் இருக்காங்க..

தேடலின் ஆரம்ப நிலையிது... ஒரு சமன்பாட்டை அடைய இன்னும் தேடல் வேண்டும்.. பத்மாக்கா.. அப்புறம் அந்த தேடலையும் ஸ்டாப் பண்ணிடனும்....

ஓஷோவெல்லாம் படிக்கிறீங்க அப்புறம் என்ன... சும்மா பூந்து விளையாடுங்க :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எல்லாருக்கும் எப்பவும் இந்த கேள்விகளும் குழப்பங்களும் இருக்கு பத்மா. இந்த கேள்விகளை realise பண்றதே தெளிவாக்கான முதல் படி. நெறைய பேரு இந்த stage க்கு கூட வர முடியாம தவிக்கரதுண்டு. நீங்க Great. எப்பவும் எதிர்பார்ப்புகள் தான் நமக்கு முதல் எதிரி. அதை வெல்வது அத்தனை சுலபம் இல்ல (எனக்கும் சேத்து தான் சொல்றேன்). ஆனா அந்த எதிர்பார்ப்புன்னு ஒண்ணு இல்லைனா வாழ்க்கையோட சுவாரஸ்யம் போய்டும்கறது நிஜம்

நாம நாமளா இருப்போம்... நம்மள புரிஞ்சுக்கறவங்க நம்ம எதிர்பார்ப்ப பூர்த்தி செய்வாங்க நிச்சியமா... இல்லேனா இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் அவ்வளவு தான். எதுவுமே சொல்வது எளிது செய்வது கடினம்னு எனக்கு புரியுது. Let the life takes it way, it will take you where you are supposed to be. Thanks Padma

க.பாலாசி said...

//எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? //

அதுசரி... இப்படியே குழம்பி ஒருநாள் மூர்ச்சையுற்றேன்... அவ்வப்போதும்கூட... ஆயினும் கிடையாத பதிலுக்காக ஏன் தேடலுடனான வாழ்க்கை... நிறை பேசலாம்... பட்... விடை???

//ஒரு வேளை இவை நின்று போனால் அன்று தான் நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ? //

may be....

r.v.saravanan said...

மனதில் இருக்கும் நான் என்ற பிம்பத்துடன் கண்ணாடியின் முன் நிற்பது பொருந்தவே இல்லை .நிஜத்தை பார்க்கும் அனைவரும் நிஜமான நிஜத்தை மிஸ் பண்ணிவிடுகிறார்கள்

அருமை

ursula said...

thozi muthalil intha kelviyil irunthu veliyil vaarunkal,
nan yar yenra kelviyellaam verum mozhithaan, oru paravaikku thaan yeppadi paravai yenru therium so namum our paravaiyaai vazhvom.

anbudan
ursularagav

ஸ்ரீராம். said...

என் இவ்வளவு சிக்கலா யோசிக்கிறீங்க...

Madumitha said...

என்ன ஆச்சு அம்மே?

அம்பிகா said...

//எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? //
ஆனால் இந்த அங்கீகாரத்துக்கு தான் எல்லோரும் அலைகிறோம்.

Admin said...

இந்தக் குழப்பத்துக்கு காரணம் என்னவோ...

Prasanna said...

இதுக்குத்தான் நான் யோசிக்கறதே கிடையாது :) ஹீ ஹீ

காமராஜ் said...

நானும் கூட உர்சுலா வின் கருத்தையே வழிமொழிகிறேன்.
ஆயினும் இது ஒரு சிந்தனை கவிதையாயிருக்க வாசிப்பது பாராட்டுவது இந்த இரண்டையும் செவ்வனே.
கவிதை நல்லாயிருக்கு பத்மா.

uma said...

HI BE as you are padmaja dont be so frightened of life accept as it is imagination is nice but all is in his hands

balag said...

Great. This is the sign of growth. You dared to look at yourself. The wandering mind is being monitored by the watching mind. Keep it going. Such introspection brings transformation of your self.

adhiran said...

//எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? யோசிக்கணும்

ஏன் நிச்சலனமாய் இருக்க இயலவில்லை ? முயலணும்

இதெல்லாம் சாதித்தால் என்ன ஆகும் ?புரியவில்லை
ஆனால் இவை சுற்றி வதைப்பதை நிறுத்த இயலவில்லையே !
ஒரு வேளை இவை நின்று போனால் அன்று தான் நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ? //


what is this padma. pondychery Aasirama vaazhkkaikku poka uththesama!